நியாய விலை கடை , பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா

நியாய விலை கடை , பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா
X

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நியாய விலை கடை திறப்பு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது

தண்டராம்பட்டு ஒன்றியம், அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, கல்தாம்பாடி கிராம மக்களின் நீண்ட நாள் கோர்க்கையான பகுதி நேர நியாய விலைக் கடையினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.

மேலும் தண்டராம்பட்டு ஒன்றியம், டி.எஸ்.டி. 617 அகரம்பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் (ஆவின்) கூட்டுறவு சங்கத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், கூட்டுறவு சங்க உதவி பதிவாளர், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் , பால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!