சர்வர் பழுது: மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

சர்வர் பழுது: மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு
X
தண்டராம்பட்டு அருகே சர்வர் பழுது என மக்களை திருப்பி அனுப்புவதால், மின் கட்டணம் செலுத்த தனியார் இ-சேவை மையத்தை நாடும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பெருந்துறை பட்டு கிராமத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு வாணாபுரம், வரகூர், காம்பட்டு ,பேராயம் பட்டு, அகரம்பள்ளிபட்டு, உள்ளிட்ட 10 கிராம மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் கோளாறு ஏற்பட்டதாக கூறி அலுவலகத்தில் பணம் செலுத்த வருபவர்களை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மற்ற இடங்களுக்கு சென்று தனியார் இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற அலைச்சலும் தொடர்கிறது. சர்வர் பிரச்சனை அடிக்கடி ஏற்படுவதால் மாற்று நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது