குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்

குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் முன்வைத்த கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!