தண்டராம்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகள் அபேஸ்: மர்ம நபர்கள் கைவரிசை

தண்டராம்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகள் அபேஸ்: மர்ம நபர்கள் கைவரிசை
X

தண்டாரம்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரை கீழே இறக்கி காப்பர் கம்பி, ஆயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரை கீழே இறக்கி காப்பர் கம்பி, ஆயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்மார் உடைக்கப்பட்டு கீழே கிடப்பதாக தண்டராம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, டிரான்ஸ்பார்மருக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்துவிட்டு, மர்ம நபர்கள் அதனை கீழே இறக்கி அதற்குள்ளாக இருக்கக்கூடிய காப்பர் கம்பி, ஆயில் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 84 ஆயிரம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story