செங்கம் தொகுதி வேட்பாளருக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு

செங்கம் தொகுதி வேட்பாளருக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு
X
செங்கம் சட்டமன்ற தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனி தொகுதியில் அதிமுக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு அவர்களுக்கு முன்னாள் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற உறுப்பினர் பூக்கடை வெங்கடேசன் தலைமையில் செங்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமுத்தூர் ஆகிய ஒன்றிய நிர்வாகிகள் மண்மலை தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலை அருகே சால்வை மற்றும் இனிப்பு வழங்கி தொகுதி சார்பில் வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare