சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி..!

சாலை விபத்தில் இளைஞர்  உயிரிழப்பு : மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி..!

கோப்பு படம் 

திருத்தணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வானத்தின் மீது மோதி ஒரு இளைஞர் உயிரிழந்தார். இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருத்தணி அருகே கனகமாசத்திரம் அருகில் மாவூர் பகுதியில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் உயிரிழப்பு மற்றொரு படுகாயம் போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா கனகம்மா சத்திரம் அருகில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மாவூர் கிராமத்திற்கு வெளியில் காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் திருமலை (வயது 18), இவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட இவரது நண்பர் சுனில் (வயது18). கல்லூரி மாணவர் இவர் பின்னால் அமர்ந்து வந்தார்

இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அருகில் வந்த மற்றொரு வாகனத்தில் இவர்கள் மமோதியதில் இருவரில் திருமலை என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த சுனில் என்கின்ற மற்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். இதனைக் கண்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள காவல்துறையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள பதிவுகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விபத்திற்கு காரணமான வாகனம் எந்த வாகனம் என்று கனகம்மாசத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story