100 நாள் பணியை வழங்க பெண்கள் சாலை மறியல்

100 நாள் பணியை வழங்க பெண்கள் சாலை மறியல்
X
திருத்தணி அருகே என். என் கண்டிகை ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்க கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி அருகே என். என்.கண்டிகை ஊராட்சியில் 100 நாள் பணி வழங்கவில்லை என்று அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் என்.என். கண்டிகை ஊராட்சியில் 2500-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கடந்த 2 மாதத்துக்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையான 100 நாள் பணியை வழங்கவில்லை என கூறி கோரிக்கையை முன்வைத்து என்.என்.கண்டிகை ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள சாலையில் பெண்கள் ஒன்று கூடி அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

irandu மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், இது சம்பந்தமாக மேல் எழுத்தில் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
ai future project