/* */

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்

திருத்தணி அருகே வி.கே.என். கண்டிகை ஊராட்சியில் நரசிங்கபுரம் பகுதியில் கல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது

HIGHLIGHTS

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
X

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பாம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வி.கே.என். கண்டிகை ஊராட்சியில் நரசிங்கபுரம் பகுதியில் புதிதாக கல் குவாரி அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் கல் குவாரி அமைக்க சுற்று வட்டார கிராம மக்கள் சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் குவாரி அமைய உள்ள பகுதியில் முற்றுகையிட்டு தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக அமைக்கப்பட உள்ள கல்குவாரியில் அதிக சப்தத்துடன் கூடிய வெடி பொருட்கள் பயன்பப்டுத்தப்படுவதால், கிராமமக்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விலை நிலங்களில் கற்கள் விழுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும்,லாரிகள் அதிக வேகத்தில் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் கல் குவாரிக்கு அனுமதி ரத்து செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கிராமமக்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

Updated On: 22 Jun 2023 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  7. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  9. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்