கோரமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோரமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
கோரமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் வகையில் கோவிட் - 19 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கோரமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். நரசிம்ம ராஜ் உடனிருந்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி