சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : மற்றவர் மருத்துவமனையில் அனுமதி..!

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : மற்றவர் மருத்துவமனையில் அனுமதி..!
X

இருசக்கர வாகன விபத்து (கார்ட்டூன் படம்)

இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரு சக்கரத்தின் சென்றவர் சாலையில் விழுந்தபோது லாரி ஏறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.மற்றவர் மருத்துவமனையில் அனுமதி.

திருத்தணியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சாலையில் விழுந்தவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சித்தர் சாலையில் உள்ள வள்ளிநகர் சேர்ந்தவர் தாமோதரன் அவரது மகன் பாபு ( வயது 29) சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் திருத்தணி பைபாஸ் சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் திருத்தணி குமரன் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விக்னேஷ்( வயது 23) என்பவர் பைபாஸ் சாலை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தபோது பைபாஸ் சாலை ரயில் உயர் மட்ட பாலம் அருகில் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பைக்கில் சென்று இருவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற லாரி பாபுவின் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயம் ஏற்பட்டு ஊருக்கு போராடிக் கொண்டிருந்த விக்னேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story