திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா!

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா!
X

1001 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதி, திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா ஆர்.கே. பேட்டையில் இன்று நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஆர்.கிரன் குமார் முன்னிலையில் ஆர்.கே.பேட்டை ஒன்றிய தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு முதற்கட்டமாக ஆர்.கே. பேட்டையில் 1001 மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நகர திமுக பொறுப்பாளர் வினோத்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் கிரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகள் மகேஷ்குமார், ஜெயேந்திரன், தமிழரசன், சதீஷ்குமார் ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் ரஞ்சித்குமார், சண்முக பாண்டியன், தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!