/* */

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவு: அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவை சீரமைக்குப்பணிகளை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவு:  அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு
X

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை இந்து சமய ஆணையர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டு ஏழு நாட்களுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை மண் சரிவு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்ல தடை விதித்து பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த சீரமைப்பு பணிகளை இந்து சமய ஆணையர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டு ஏழு நாட்களுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இக்கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விழா நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்து மொட்டை அடித்து சுவாமியை தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் பகுதியில் தொடர் மழையின் காரணமாக மிக்ஜாம் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணிகள் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ஆய்வு மேற்கொண்டு விரைவாக ஏழு நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து வாகனங்கள் மலைக் கோயிலுக்கு செல்ல விரைவாக செயல்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Updated On: 14 Dec 2023 9:00 AM GMT

Related News