/* */

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ 1 .22 கோடி பக்தர்கள் காணிக்கை

1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம், 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளி ஆகியவை செலுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் திறப்பு:    ரூ 1 .22 கோடி பக்தர்கள் காணிக்கை
X

திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 25 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம், மற்றும் 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதே போல் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனையடுத்து திருத்தணி முருகன் திருக்கோயில் மலைக்கோயிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 25 நாட்களில் 1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம் மற்றும் 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Updated On: 17 Jun 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  7. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  8. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  10. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!