திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு தெப்பத் திருவிழா
திருத்தணி ஆடி கிருத்திகை விழா 3 லட்சம் பக்தர்கள் காவடிகள் செலுத்தி சாமி தரிசனம். மாலை சரவணப் பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து காலை முதல் மாலை வரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு புத்தியும் பால்குடம் சுமந்தும் நேத்து கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டனர்.
மாலை 7 மணி அளவில் சரவணப் பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவில் வள்ளி தெய்வானை சமேத உற்சவர்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மேளத்தளங்கள் முழங்க மலை கோயிலில் இருந்து உலா வந்து தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.
கோயில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு மகா தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து தெப்பம் குளத்தைச் சுற்றி மூன்று முறை பவனி நடைபெற்றது. தெப்பத்தில் அமைச்சர் காந்தி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் பூபதி கோவில் இணை ஆணையர் பொறுப்பு அருணாச்சலம் உட்பட முக்கிய பிரமுகர் அமர்ந்து தெப்பதில் இருந்தபடி பவானி வந்தனர்.
மொத்தம் மூன்று முறை குளத்தை தெப்பம் பவனி நடைபெற்றது. குளத்தைச் சுற்றி கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வைத்து அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என விண்ணை பிளக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பியவாறு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu