டூவீலரில் 400 மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் திருத்தணியில் கைது!

டூவீலரில் 400 மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் திருத்தணியில் கைது!
X
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு இருசக்கர வாகனத்தில் 400 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் திருத்தணியில் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம், 10ம் தேதி முதல் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திருவள்ளூர் மாவட்ட திருத்தணி எல்லைப் பகுதிகளில் உள்ள ஆந்திர மாநில டாஸ்மாக் கடைகளில் தமிழக குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்னை பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம்–திருவாலங்காடு கூட்டுச்சாலையில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ. முருகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் இருவர் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்ததனர்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, நகரியில் இருந்து மாங்காய் மூட்டை எடுத்து வருகிறோம் என போலீசாரிடம் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்த போது, 400 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயரங்கன், வடபழனியை சேர்ந்த. கிஷோர்குமார் என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!