திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா..!
திரௌபதி அம்மன்
திருத்தணி திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த மாதம், 25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சந்தனகாப்பு தீபாராதனை நடைபெற்று வந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து காலை,மாலை இரு வேலைகளையும் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு ஆலைகளாலும்,வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பெண்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபாடு நடத்தினர். மாலை காப்பு கட்டி விரதமிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் புனித நீராடி உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு பூக்களாலும் அலங்காரம் செய்து ஊர்வலமாக திரவுபதியம்மன் கோவிலுக்கு வந்து ஆலய வளாகத்தில் ஏற்பாட்டு செய்திருந்த தீ குண்டத்தில் பூங்கரகத்துடன் இறங்கி பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பின் தீமிதித்தனர்.
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். காப்பு கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி அக்னி தீக்குண்டத்தில் இறக்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பக்தர்கள் தீ மிதிப்பதற்கு சிரமப்பட்டனர். எதிர்பாராதவிதமாக அக்னி குண்டத்தில், 6 பக்தர்கள் தவறி விழுந்து பலத்த தீக்காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu