திருவள்ளூர்: ஆற்றை கடந்து சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவல நிலை
திருத்தணி அருகே உள்ள சூரியநகரம் பஞ்சாயத்து பகுதியில் மயானம் இல்லாததால் சிரமப்படும் கிராம மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சூரியநகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொம்ம ராஜபுரம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் . கிராமத்தில் எவராவது இறந்து போனால் சடலங்களை அடக்கம் சுடுகாடு இல்லாத காரணத்தினால் அங்குள்ள ஆற்றங்கரை பகுதிகளில் சடலங்களை இழுத்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர் இந்நிலையில் சுடுகாடு வேண்டி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும எவ்வித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது .
இதனையடுத்து, பொம்ம ராஜபுரம் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் . அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் அங்குள்ள நந்தி ஆற்றங்கரை ஓரத்தில் அவரை புதைக்க நினைத்து, ஆற்றங்கரையில் முழங்கால் அளவுக்கு தண்ணீரில் மூழ்கியபடி உடலை கொண்டு சென்றுள்ளனர். திட்டமிட்டபடி ஆற்றங்கரை ஓரத்தில் அடக்கம் செய்திருக்கின்றனர். இப்படியாக அவர்கள் சடலத்தை சுமந்து செல்லும் காட்சி, பார்ப்போரை கவலை கொள்ள செய்யும் அளவுக்கு இருக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாடு கேட்டும் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற அவலம் ஏற்பட்டுள்ள தாகவும் எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக இந்தப் பிரச்னையை தலையிட்டு பொம்மராஜபுரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் தங பகுதிக்கு சுடுகாடு வசதி இல்லாத காரணத்தினால் இறந்து போனவரின் சடலங்களை கூட எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் நேரங்களில் அனைத்து வசதிகள் செய்து தருகிறோம் வாக்குறுதிகள் தருவார்கள் தவிர மக்களின் பிரச்னையில் அக்கறை காட்டுவதில்லை என்று எனவே தற்போதாவது பொறுப்பேற்றிருக்கும் அரசு தாங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்து தங்கள் பகுதிக்கு சுடுகாடு அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu