திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி ரயில் நிலையம் அருகே நீட் தேர்வு மோசடி மற்றும் கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வில் மோசடி மற்றும் கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் அந்தோணி தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வு மோசடி எழுதிய 24 லட்சம் மாணவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும்.

இந்தாண்டு மருத்துவர் மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மாநில அரசு நடத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும், மாநில உரிமைக்கு எதிரான நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சியில் கலாச்சாராய சாவுக்கு காரணமான அனைத்து காவல்துறை மற்றும் அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துக்கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!