காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்
X

உயிரிழந்த ராணுவ வீரர். நாய்க் சுபேதார் ஸ்டான்லிநாய்க் சுபேதார் ஸ்டான்லி

காஷ்மீரில் சாலை விபத்தில் உயிரிழந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடன் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை, பெரியராமாபுரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் என்பவரின் மகன் நாய்க் சுபேதார் ஸ்டான்லி, இவர் ஜம்மு காஷ்மீர் மாவட்டம் லடாக் பகுதியில் ராணுவவீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி லடாக் பகுதியில் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை, பெரியராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆட்சியர் ஆறுதல் கூறினார்.

அதனை தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெங்களூரில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள், கிராம பொதுமக்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 32 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!