குற்றச்சம்பவங்கள் தடுக்க கண்காணிப்பு கேமரா
பைல் படம்
.பொம்மைகளாக காட்சியளிக்கும் கண்காணிப்பு கேமராக்களால் திருத்தணியில் குற்ற செயல்கள் அதிகரிப்பு.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் குற்ற செயல்கள் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் முக்கிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களை குரங்குகள் சேதப்படுத்தியது மரங்கள் விழுந்து சேதம் உட்பட பல்வேறு காரணங்களால் 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் பழுதடைந்து பயனற்று பொம்மைகள் போல் காட்சி அளிக்கிறது. இருப்பினும் காவல்துறை சார்பில் கேமராக்கள் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நகரில் சமீப காலமாக வீடுகளில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்தும் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக பேருந்து நிலையம் அருகே உள்ள மேட்டு தெருவில் கடந்த சில நாட்களில் மட்டும் 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரபாகரன் என்பவர் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அவரது வீட்டிற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இருசக்கர வாகனம் திருடப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் காவல் துறை சார்பில் பிரதான பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே நகரில் முக்கிய பகுதிகள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து அனைத்தும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu