பள்ளிப்பட்டு அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்

பள்ளிப்பட்டு அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.5  லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்
X

தனியார் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பள்ளிப்பட்டு அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு வட்டம். பாண்டறவேடு ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பெரும்பான்மை மக்கள் கூலி தொழில் நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் செயல்படும் வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 200 மாணவ மற்றும் மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் ஆன நோட்டுப் புத்தகம், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்கூல் பேக், மேலும் கல்வி சம்பந்தமான உபகரணங்களுடன் மாணவர்களுக்கு அறுசுவை பிரியாணி விருந்து ஆகியவை பள்ளி மாணவர்களுக்கு தனியார் அறக்கட்டளையினர் வழங்கினர்.

பள்ளி மாணவர்களிடையே அறக்கட்டளை சார்பில் உரையாற்றிய நிர்வாகிகள், அரசு பள்ளியில் இதில் நீங்கள் பயிலும் மாணவர்கள் வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும், மருத்துவராகவும், வரவேண்டும், நல்ல முறையில் நீங்கள் படிக்க வேண்டும். உங்களுக்கு தேவையானதை எங்கள் அறக்கட்டளையின் சார்பில் அரசு பள்ளிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேச்சிக்கண்ணன் நிறுவனத் தலைவர் மற்றும் சுப்பிரமணி மற்றும் மேனேஜ்மென்ட் டைரக்டர் சுப்பிரமணியம் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பேச்சிக்கண்ணன் அறக்கட்டளைக்கு அதன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா