மழையில் நனைந்தபடி திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

மழையில் நனைந்தபடி திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
X

திருத்தணி முருகன் கோயிலில் திடீரென பெய்த மழை

திருத்தணி முருகன் கோவிலில் திடீரென செய்த ஒரு மணி நேரம் மழையின் காரணமாக கந்த சஷ்டி சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நனந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடைகளில் ஐந்தாம் படை வீடாக அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களிலிருந்து விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்

இந்த நிலையில் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது முன்னிட்டு இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது சுப்பிரமணியசாமி மலைக்கோவிலில் திடீரென்று ஒரு மணி நேரம் பெய்த மழை படிக்கட்டுகளில் நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் ஆறாக ஓடியது. ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது

மேலும் இந்த மழையின் காரணமாக திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் மலை மீது கந்த சஷ்டி நிகழ்வுக்கு சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் வரிசையில் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.


தொடர் மழையின் காரணமாக மலைக்கோயில் முழுவதும் மாட வீதியில் தண்ணீர் தேங்கி நின்றது இதனால் பக்தர்கள் கடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மலைக் கோவிலில் படிக்கட்டுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் ஒடியதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து ரசித்து சென்றனர்.

Tags

Next Story