அதிமுகவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் சசிகலாவுக்கு மட்டுமே உண்டு
திருத்தணியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் தனது ஆதவாளர்கள் மத்தியில் பேசினார்.
அதிமுக வில் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றும், தமிழக அர்சின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், அரசு கொறடாவாகவும் பணியாற்றிய பி.எம்.நரசிம்மன்.
கட்சி கட்டுப்பாடுகள் மீறி செயல்பட்டதாக அவரை கட்சியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உத்தரவிட்டனர். இருப்பினும், வேறு கட்சிக்கு செல்லாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்த பி.எம்.நரசிம்மன் சமீபத்தில் சசிகலாவை சந்தித்து அவரின் தலைமையில் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில், திருத்தணி தொகுதிக்குட்பட்ட வங்கனூரில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், முன்னாள் எம்.பி சி. கோபால், முன்னாள் எம்.எல்.ஏ தண்ணீர்குளம் ஏழுமலை உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொடண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பி.எம்.நரசிம்மன் பேசுகையில்.. நூறாண்டுகள் கடந்தும் அதிமுக என்ற ஆலமரம் இருக்கும், அம்மா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வந்த போது ஆட்சி, கட்சிக்கு பாதிப்பு வராமல் பார்த்தவர் சசிகலா.
சின்னம்மாவால் பதவிகள் பெற்றுக் கொண்டு இன்று கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசி வருகிறார்கள். ஆனால் அவர்கள் கனவு பலிக்காது. சசிகலா மட்டுமே அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர். விரைவில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அதுவரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu