திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திருத்தணி: ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
X
திருத்தணியில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது; ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் கனகம்மா சத்திரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருவள்ளூரில் இருந்து ஆந்திரா நோக்கி வந்த மினி லாரியை, போலீசார் மடக்கி மடக்கி சோதனை செய்தனர். அதில் 800. கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. திருநின்றவூர் சேர்ந்த லாரி ஓட்டுநர் உதயா (35) என்பவரை கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்த ரேசன் அரிசியை, திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
ai based healthcare startups in india