பள்ளிப்பட்டு அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

பள்ளிப்பட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை எம்எல்ஏ சந்திரன் தொடங்கி வைத்தார்.

பள்ளிப்பட்டு அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவை எஸ்.சந்திரன் எம்‌.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம். ஜங்காளப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கோபி வரவேற்றார்.

இதில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, நாகராஜன், பொன்.சு. பாரதி , குருநாதன் ஒன்றிய கவுன்சிலர் முத்து ரெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராகினி முருகேசன், கிளைக் கழக நிர்வாகிகள் கவாஸ்கர், ஹரிஷ், ரூபேஷ், மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!