கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
X

கஞ்சாசெடி(பைல்படம்)

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருத்தணி அருகே ஆந்திர தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில். , அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருத்தணி சுப்பிரமணியம் நகர் கடைசி தெருவை சேர்ந்த கஜபதி(20) மற்றும் திருத்தணி நேரு நகர் ஆசாரி தெருவை சேர்ந்த முபாரக்(20) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.



Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி