திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில்  ஈடுபட்டவர்  கைது
X

தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருத்தணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) 

காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி நோட்டுகள் மற்றும் ரூ.17, ஆயிரத்தை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் சூதாட்டம், காட்டன் சூதாட்டம் நடப்பதாக திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படைகள் அமைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருத்தணி நகரப்பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருத்தணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடமிருந்து காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி நோட்டுக்கள் மற்றும் ரூ.17, ஆயிரம் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இந்த காட்டன் சூதாட்டம் என்பது ஏழை கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்கள் சம்பாதிக்கும் குறைந்த பணம் காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் பலஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அவர்களை உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?