போலி நகை கொடுத்து ஏமாற்றிய பெண்ணிடம் பணத்தை மீட்ட அடகுக் கடைக்காரர்
திருத்தணியில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து 68 ஆயிரம் பணம் பெற்ற கர்நாடக மாநில பெண், போலி நகை என்று தெரிந்ததும், மர்ம பெண்ணை பிடிக்க முயற்சி செய்யும்போது காரில் கிளம்பிய அவரை துரத்தி சென்று பெண்ணிடம் இருந்து பணப்பையை அடகு கடைக்காரர் மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் பழைய கமலா திரையரங்கம் அருகில் அடகு கடை மற்றும் புது டிசைன் நகைகளை விற்கும் கன்சிகா ஜுவல்லரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை அசோக் என்பவர் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு ஒரு பெண் வந்து 2.75 சவரன் நகை அடமானம் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நகை அடமானம் வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார் அதற்கு அந்த பெண் ஆதார் கார்டு கொடுத்துள்ளார். அதில் ரெஜினாசிங்(34) கர்நாடக மாநிலம் என்று உள்ளது,
இதனைப் பெற்றுக் கொண்டு அந்த பெண் அளித்த 2.75 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். இதனை பரிசோதனை செய்து பார்த்து விட்டு அந்த பெண்ணிடம் இருந்து ஆதார் கார்டை பெற்றுக் கொண்டு அவரிடம் கையெழுத்தும் பெற்றுக் கொண்டு இவருக்கு ₹.68,000 ஆயிரம் ரொக்க பணம் கொடுத்துள்ளார்,
இதையடுத்து அந்த மர்ம பெண் ரெஜினா சிங் அந்த கடையிலிருந்து உடனடியாக வெளியேறி அவர் வந்த காரில் ஏறிச்செல்ல தயாரானார். இதனிடையே அடகு வாங்கிய நகைகளை உரிமையாளர் அசோக் பரிசோதித்தபோது, அந்த நகை கவரிங் நகை என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் வெளிய கார் ஏறச்சென்ற பெண்ணை நிற்க சொல்லியுள்ளார்,
ஆனால், அந்தப்பெண் நிற்காமல் காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார். அப்பொழுது காரை பின் தொடர்ந்து ஓடிச்சென்று, காரில் இருந்து இறங்கச் சொல்லியுள்ளார் அசோக். அவர் இறங்க மறுத்தபோது, ரெஜினா சிங்கில் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை அசோக் பறிக்க முயன்றால். ஆனால் கார் நிற்காமல் சென்றது. எனினும் தான் பிடித்த பேக்கை விட்டு விடமால் பற்றியபடி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கார் சென்ற வேகத்திற்கு ஓடிச்சென்று பேக்கை கைப்பற்றியபடி கீழே விழுந்ததில் அசோக் படுகாயம் அடைந்தார்.
மர்ம பெண் ரெஜினாசிங் வந்த கார் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பதிவாகி இருந்தது. இக்காட்சிகளை வைத்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
பட்ட பகலில் போலியான நகைகளை நகைக்கடையில் வைத்து பணம் பறிக்க முயன்ற அந்த மர்மப் பெண் யார்? உடன் வந்த காரில் வந்தவர்கள் யார்?என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu