கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து பயணிகள் படுகாயம்

கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து பயணிகள் படுகாயம்
X

திருத்தணி அருகே ஏரிக்கால்வாயில் கவிழ்ந்த மினி பேருந்து

திருத்தணி அருகே ஏரி கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திருத்தணி அருகே ஏரி கால்வாயில் மினி பேருந்து கவர்ந்து 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் இருந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பயணிகள் மினி பேருந்தை டிரைவர் பர்குணன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர்,வளர்புரம் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது

டி.புதூர் என்ற பகுதியை கடக்கும் பொழுது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஏரி அருகில் உள்ள ஏரி கால்வாயில் திடீரென்று கவிழ்ந்தது. பேருந்து அப்படியே சாய்ந்ததால் பேருந்தில் இருந்த 22 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இதில் 5 பெண்கள் உள்பட 10 பேர் சிறிய காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

மேலும் இதில் வள்ளியம்மாள் என்பவர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பேருந்து ஓட்டுநர் பற்குணம் என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டார்.

தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி காவல்துறையினர், மினி பேருந்து ஏரி கால்வாயில் கவிழ்ந்தது காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மினி பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் இருந்த 22 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture