திருவள்ளூரில் பசுமை வீட்டிற்கு லஞ்சம்: ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சூரியநகரம் ஊராட்சி பொம்பராஜபுரம் இருளர் காலனியைச் சேர்ந்த மாசிலா. பசுமை வீடு திட்டத்தின் கீழ், அவரது வங்கி கணக்கில் ரூ. 74 ஆயிரம் செலுத்தப்பட்டது. ஊராட்சி செயலாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர், மேற்கண்ட பயனாளியை வங்கிக்கு அழைத்துச்சென்று ரூ. 74 ஆயிரம் பெற்று அவரிடம் ரூ. 44 ஆயிரம் வழங்கி வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
நடந்த சம்பவம் பற்றி மாசிலா, அவரது மகனிடம் தெரிவித்துள்ளார். ரூ.30 ஆயிரம் குறைவாக இருப்பது குறித்து ஊராட்சி செயலரை கைபேசியில் தொடர்பு கொண்டு மாசிலிவின் மகன் குமார் கேட்டதற்கு 44 ஆயிரம் உங்கள் அம்மாவிடம் கொடுத்து விட்டேன். ரூ.30ஆயிரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தரவேண்டும் என்றார். இது குறித்த உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு ஊராட்சி செயலாளர் ஜெயப்பிரகாஷ் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து, கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu