கரும்பு தோப்பில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கரும்பு தோப்பில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
X

பைல் படம்

திருவலாங்காடு அருகே கரும்பு தோப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவலாங்காடு அருகே கரும்பு தோப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியம் வெங்கடாபுரம் கிராம பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணல் கடத்தி வருவதாக திருத்தணி தாசில்தார் வெண்ணிலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில், சிவாடா கிராம நிர்வாக அலுவலர் பத்மினி தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் கொசத்தலை ஆற்றுப் பகுதியில் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் சிலர் சாக்கு பைகளில் மணல்களை நிரப்பி அதனை கடத்தி ஆற்றின் அருகே உள்ள கரும்பு தோப்பில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. பின்னர் கரும்பு தோப்பில் சென்று பார்த்ததில் சுமார் 500-க்கு மேற்பட்ட சாக்கு பைகளில் மணல் இருந்தது கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இது மட்டுமல்லாமல் நல்லாடூர், அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கொசத்தலை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் கரையை உடைத்து. சவுட்டு மண், மணலை திருட்டுத்தனமாக எடுத்துச்செல்வதாகவும், இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம். தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுப்பதற்கு முன் வருவதில்லை என்று இது போன்று மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு