திருத்தணியில் முருகர் சிலை கண்டுபிடிப்பு.
திருத்தணி அருகே நத்தம் மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலை
திருவள்ளுர் மவட்டம் திருத்தணி அருகே, நத்தம் கிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தற்போது பாழடைந்துள்ளது. இந்த மண்டபத்தில் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் தங்கி செல்வது வழக்கம்.
குறிப்பாக, ஆடிக்கிருத்திகை விழாவின் போது இந்த மண்டபத்தில், நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்கியிருந்து பின், முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், ஆடி பரணி ஒட்டி, காவடிகள் எடுத்து நடந்து வந்த பக்தர்கள், மண்டபத்தில் தங்கி இருந்தனர். அப்போது ஒரு பக்தருக்கு திடீரென சாமி வந்தது. அவரின் அருள்வாக்கு படி அங்குள்ள மண்டபத்தில் தோண்டிய போது, இரண்டரை அடி உயரமுள்ள முருகர் கற்சிலை கண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், அந்த மண்டபத்தில் குவிந்தனர். முருகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று சிலை குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து திருத்தணி வட்டாட்சியர் மதன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு கிராம மக்களிடம் கூறினார்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் இந்த சிலையை நாங்களே வைத்து வழிபடுகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். இதனால் வருவாய் துறைகளுக்கும் பொதுமக்கள் இடையே ஒருமணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது
திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவின் போது ஆடி பரணி அன்று ஆற்காடு சேலம் மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதியில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் வந்து நத்தம் மண்டபத்தில் தங்குவார்கள். பின்னர் அங்கிருத்து ஆடி கிருத்திகை தினத்தன்று காலையில் மேற்கண்ட பக்தர்கள் பால் குடத்துடன் திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு சென்று உற்சவருக்கு பால் அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இது பல ஆண்டுகளாக நடந்துள்ளது அந்த வகையில் தான் ஆம்பூர் பக்தர்கள் மண்டபத்தில் தங்கியிருந்த போது இந்த முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu