வீட்டு ஜன்னலில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கு, மீட்ட தீயணைப்பு வீரர்கள்

வீட்டு ஜன்னலில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கு, மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

திருத்தணியில் வீட்டின் ஜன்னலில் சிக்கிய குரங்கை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

திருத்தணியில் வீட்டின் ஜன்னலில் சிக்கி குரங்கு உயிருக்கு போராடியது, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி செங்குந்தர் நகர் பகுதியில் மாஜி வனக்காவலர் வஜ்ரவேலு வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு ஜன்னல் கதவில் குரங்கு ஒன்று சிக்கியது.

இதில் குரங்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு குடல் வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய குரங்கை மீட்டனர்.

திருத்தணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தனியாக ஒரு கூண்டு அமைத்து குரங்கை அதில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்