திருத்தணியில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் நாசர் வழங்கினார்

திருத்தணியில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் நாசர் வழங்கினார்
X

திருத்தணியில் ஆசிரியர்கள் 13 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ன் விருதினை அமைச்சர் நாசர் வழங்கினார். அருகில் எம்பி ஜெகத்ரட்சகன், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் எம்எல்ஏக்கள்.

திருத்தணியில் 13 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.


இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்ரட்சகன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி ஆகியோர்கள் கலந்துகொண்டார்.

Tags

Next Story
marketing ai tools