திருத்தணி முருகப்பெருமானுக்கு 3 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்

திருத்தணி முருகப்பெருமானுக்கு 3 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
X
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்சவர் முருகப்பெருமானுக்கு 3 ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் முன்னிலையில் 3 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம்செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும், முழுமுதற் தமிழ் கடவுளான முருகப்பெருமான் தலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்,

இந்த ஆண்டு திருத்தணி நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்ட ஆறுமுகசாமி திருக்கோயிலில் 1008 பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கோயில் துணை ஆணையர் விஜயா அவரது தலைமையில் திரளான பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக மலைக் கோயிலுக்கு எடுத்து வந்தனர். இந்த 3000 லிட்டர் பால் மலைக்கோவிலில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் நடைபெற்றது,

இதனை தொடர்ந்து விபூதி அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நடைபெற்றது. திரளான பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து அபிஷேக நிகழ்ச்சியை கண்டு களித்தனர்,

பக்தர்கள் அரோகரா!!! அரோகரா!!! என்ற பக்தி கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர், மேலும் திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா