பிரம்ம குமாரி அமைப்பு சார்பில் காவலர்களுக்கு தியான பயிற்சி

பிரம்ம குமாரி அமைப்பு சார்பில் காவலர்களுக்கு தியான பயிற்சி
X

பிரம்மகுமாரிகள் அமைப்பு மூலம் காவலர்களுக்கு தியான பயிற்சி அளிக்கப்பட்டது 

காவலரின் மன அழுத்தம் போக்கும் விதமாக பிரம்ம குமாரி அமைப்பின் சார்பில் தியான பயிற்சி நடைபெற்றது.

திருத்தணியில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் தியான பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு, திருத்தணி, கனகம்மாசத்திரம் ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 6.காவல் நிலையங்களில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் பணிச்சுமை காரணமாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் தியான பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த தியான பயிற்சி மூலம் மன அழுத்தம் ஏற்படும் போது அதிலிருந்து நம் வெளியே வர அதிகாலை உடற்பயிற்சியும் மற்றும் தியான பயிற்சியும் செய்வதினால் மனம் அமைதி ஏற்படும், உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்தும் மற்றும் தியான பயிற்சி செய் முறையை செய்து காட்டி இந்த பயிற்சி குறித்து விரிவாக காவலர்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!