ரூ.1 கோடி கடன்; 'மாஸ்டர் பிளான்'.. அத்தை, மாமா புதரில் வீசிய கொடூரம்
கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார், விமல்ராஜ் மற்றும் ராபர்ட் (எ) ரஞ்சித்குமார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மாருதி நகரில் வசித்து வந்தவர் சஞ்சீவி. இவரது மனைவி மாலா. சஞ்சீவி விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
மூத்த குடிமக்களாகிய இவர்கள் இருவரும் கடந்த 29-ந் தேதி வீட்டிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் 31ம் தேதி வரை வீட்டுக்கு திரும்பி வராததால் முதியவர் சஞ்சீவியின் தம்பி பாலு திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து, காணாமல் போனவர்களின் செல்போன் எண்களை ஆராய்ந்த போது 2 நபர்களின் தொலைபேசி எண்கள் தொடர்ந்து உபயோகத்தில் இல்லை என தெரிய வந்தது. மேலும் அவர்களது வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதும் தெரியவந்தது.
இதனையடுத்து காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் நண்பர்கள் மற்றும் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், முதியவர் சஞ்சீவியின் நெருங்கிய உறவினரான திருத்தணியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் 3 பேக்கரி மற்றும் தேனீர் கடைகள் நடத்தி வருகிறார். இவர், தொழில் விரிவாக்கம் செய்ய சிரஞ்சீவி மருமகன் பழனி என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 50லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள 50 லட்சத்தை ஆகஸ்ட் 2க்குள் திருப்பிக் கொடுக்க கெடு நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முதியவர் சஞ்சீவி, ரஞ்சித்குமாரை பார்க்கும்போதெல்லாம் 50 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அபார ரீதியாக பல பேரிடம் லட்சக்கணக்கில் ரஞ்சித்குமார் கடன் வாங்கி திருப்பி செலுத்த வழியில்லாமல் தவித்து வந்த நிலையில், முதியவர் சஞ்சீவி மற்றும் அவரது மனைவி ஆகியோரை ஆந்திரமாநிலம் அப்பலகுண்டா கோயிலுக்கு அழைத்துச் செல்லுமாறு ரஞ்சித்குமாரிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதை சாதகமாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் விமல்ராஜ் மற்றும் ராபர்ட் (எ) ரஞ்சித் குமார் ஆகியோர் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த 29ஆம் தேதி ரஞ்சித் குமார் என்பவர் அவரது மாமா சஞ்சீவி மற்றும் அவரது மனைவி மாலா ஆகியோரை அப்பலகுண்டா கோவிலுக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே தீட்டிய திட்டம் படி காரில் அமர்ந்திருந்த முதியவர் சஞ்சீவினி மற்றும் மாலா ஆகியோரை ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காரை நிறுத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்திர காலிப்பள்ளிக்கு கொண்டு சென்ற அவர்கள், இருவரையும் ஒரு புதரில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர், இந்த கொலையில் சம்பந்தமுடைய சிரஞ்சீவியின் உறவினரான ரஞ்சித் குமார் மற்றும் அவனது கூட்டாளி விமல்ராஜ் மற்றும் தலைமறைவாக இருந்த ராபர்ட் என்கிற ரஞ்சித்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முதியவர் சஞ்சீவி மற்றும் அவரது மனைவி மாலாவை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2கார், 2சக்கர வாகனங்கள், 46சவரன் நகை மற்றும் 8லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu