பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டப்பணி ஆணை வழங்கல்..!

பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டப்பணி ஆணை வழங்கல்..!
X

பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான ஆணையை வழங்கினார் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்.

திருத்தணியில் 73 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிக்கான ஆணைகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் வழங்கினார்.

திருத்தணி ஒன்றியத்தில் 73, பயனாளிகளுக்கு ரூபாய் 2.55 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணி ஆணைகளை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 பஞ்சாயத்துகளில் அகூர், மாம்பாக்கம், கிருஷ்ண சமுத்திரம், சின்ன கடம்பூர், பெரிய கடம்பூர், கே.ஜி கண்டிகை, விரக நல்லூர், கார்த்திகேயபுரம், போன்ற ஊராட்சிகளில் 2024 -2024 ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு 1- பயனாளிக்கு 3.5 லட்சம், என்ற விகிதத்தில், 2.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 73 பயனாளிகளுக்கு, கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாந்தி, சந்தானம் ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் கிரிராஜ் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட திருவள்ளூர் மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டம் பணி ஆணைகளை சிறப்புரையாற்றி வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், ஆர்த்தி ரவி, கிருஷ்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஷாம் சுந்தர், மாவட்ட பிரதிநிதி ஷெரிப், தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நரசிம்மராஜு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோதண்டன், டில்லி பாபு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!