பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
X
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76- வது பிறந்தநாள் விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி பஜார் வீதியில் பேரூராட்சி கழக செயலாளர் ஜெய் வேலு ஏற்பாட்டில் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி.டி. சீனிவாசன் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சாந்திபிரியாசுரேஷ், முன்னாள் கவுன்சிலர் கண்ணையா, கவுன்சிலர் முத்துராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரபாபு ,முன்னாள் கவுன்சிலர் ஏகாம்பரம், மற்றும் ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!