திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.02 கோடி காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.02 கோடி காணிக்கை
X
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியலில் 1 கோடியே 02 லட்சத்து 73 ஆயிரம்  ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில், மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் கோயில் ஊழியர்கள், முகக்கவசம் அணிந்து, உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ஒரு கோடியே 02 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், அத்துடன், 810 கிராம் தங்கம், வெள்ளி 9175 கிராம், உண்டியல் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!