திருத்தணி: அரசு பள்ளி ஆசிரியர்கள் எம். பூபதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்

திருத்தணி: அரசு பள்ளி ஆசிரியர்கள் எம். பூபதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்
X

திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி பூபதியை அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சந்தித்து மனு அளித்தனர்.

திருத்தணி திமுக அலுவலகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எம். பூபதியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி பூபதியை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அப்போது பள்ளியின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருத்தணி எம். பூபதியிடம் அளித்தனர்.

இந்நிகழ்வில திருத்தணி நகர செயலாளர் வி. வினோத்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் குமரவேல், ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!