முன்னாள் இராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

முன்னாள் இராணுவ வீரர்   வீட்டின் பூட்டை   உடைத்து நகை, பணம் கொள்ளை..!
X

கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

திருத்தணி அருகே விவசாயி வீட்டின் கதவின் பூட்டை உடைத்து தங்க நகைகள் பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு அடுத்த கொத்தக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விஜயலு (வயது 66). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவி ஷயாமளா மற்றும் மகன் ஜெயசூர்யா,உள்ளனர்.

இவர் அதே பகுதியில் சுமார் 50.ஏக்கர் பரப்பளவில் வாழைத்தோட்டம், கரும்பு, நெற்பயிர் உள்ளிட்டவை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகையில் விஜயலு உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

நிகழ்ச்சியை முடித்து இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலு உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள்,1. கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

உடனடியாக பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பதிவு செய்து திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் போலீசார், கைரேகை நிபுணர்களை மோப்பநாய், வர வைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து தனிப் படைகளை அமைத்து கொள்ளையர்களை வலை வீச்சி தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்