திருத்தணியில் துர்க்கை அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருத்தணியில் துர்க்கை அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
X
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் துர்க்கை அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட சுப்ரமணியம் நகர், அம்மன் கோயில் தெருவில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை நாட்களில் அப்பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்குகள் வைத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டு வருவார்கள். இந்நிலையில், இரவு கோயில் பூசாரி மோகன் வழக்கம்போல் பூஜை முடித்துவிட்டு மாலை கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இதனையடுத்து வழக்கம் போல் கோவில் திறக்க வந்த பூசாரி நேற்று காலை கோயிலுக்கு பூஜை செய்வதற்கு வந்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.மேலும் பித்தளை வேல் மற்றும் விலை உயர்ந்த விளக்குகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பூசாரி மோகன் திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் இத் தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து இது குறித்து வழக்கு பதிந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!