சித்தூரில் கரும்பு விவசாயிகள் மாநாடு : கோரிக்கைகள் வலியுறுத்தல்

சித்தூரில் கரும்பு விவசாயிகள் மாநாடு :  கோரிக்கைகள் வலியுறுத்தல்
X

திருவள்ளூர் மாவட்டம் சித்தூரில் கரும்பு  விவசாயிகள் மாடுநாடு நடைபெற்றது.

சித்தூர் பகுதியில் கரும்பு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சித்தூர் பகுதியில் திருத்தணி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட தலைவர் பாபு தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க பொருளாளர் வி.ஜி. கிருஷ்ணன் கலந்துகொண்டு மாநாட்டை தொடக்கிவைத்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தவும், மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும்,

திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வாக்குறுதியான கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,

மத்திய அரசு சர்க்கரை விற்பனையை கோட்டா முடியில் விற்பனையை தமிழ்நாட்டில் ரத்து செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் , தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் பெருமாள் திருத்தணி ஆலை சங்கச் செயலாளர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்