ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.25.90 லட்சம் பணம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.25.90 லட்சம் பணம் பறிமுதல்
X

திருத்தணி அருகே பறக்கும் படையினர் ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.25.90 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி தொகுதியில் திருத்தணி ஆர்.டி ஓ -வும் தேர்தல் அலுவலருமான . தீபா தலைமையில், திருத்தணி தொகுதியில் பணம் பட்டுவாடா தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர், வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடுங்கல் பகுதியில், பறக்கும் படை அலுவலர் அவினா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் வந்தவர் பையில், போதிய ஆவணம் இல்லாமல், 25 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய்யை இருந்ததை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பறக்கும் படையினர் பணத்தை திருத்தணி ஆர்.டி.ஓ., தீபாவிடம் ஒப்படைத்தனர். பின் விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் பணம் கொண்டு வந்தவர், திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப் பள்ளி சேர்ந்த சிரஞ்சீவி,30 என்றும், இவர் இந்தியா ஓன் ஏ.டி.எம்., மையங்களில், பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அரக்கோணம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 25.90 லட்சம் ரூபாய்யை எடுத்துக் கொண்டு பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை மற்றும் நொச்சிலி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஏ.டி.எம்.,மையங்களில் பணம் நிரப்புவதற்கு சென்றுக் கொண்டிருந்தார் தெரிய வந்தது. ஆனால் பணம் கொண்டு செல்லும் போது எவ்வித ஆவணமும் கையில் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணத்தை கருவூலகத்தில் ஒப்படைக்கப்படும். பின் உரிய ஆவணங்கள் காட்டி பெற்றுக் கொள்ளலாம் என ஆர்.டி.ஓ., தீபா, சிரஞ்சீவியிடம் கூறி அனுப்பி வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!