ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல் : ஒருவர் கைது..!
கைது செய்யப்பட இளைஞர்.
ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு 41 கிலோ குட்கா பொருட்களை, சொகுசு காரில் கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை தமிழக எல்லை ஏ.எம். பேட்டை என்ற இடத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவரது உத்தரவின் பெயரில் தனிப்படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சொகுசு கார் ஒன்று வேகமாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து பாலத்தின் அடிப்பறத்தில் சுரங்கப்பாதை வழியாக கடக்க முயன்றது. அப்போது அதனை மடக்கி நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்ட போது அதில் குட்கா புகையிலைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சொகுசு காரை ஓட்டி வந்த மத்தூர் காலனியை சேர்ந்த பாண்டியன் மகன் அன்பு (வயது 29) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவரது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 41 கிலோ குட்கா போதை பொருட்கள் இருந்ததை உறுதி செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 1.5 லட்சம் ஆகும் மேலும் குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேற்படி பிடிக்கப்பட்ட குட்கா பொருட்கள், சொகுசு கார் மற்றும் பிடிபட்ட இளைஞர் அன்பு ஆகியோரை திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குட்கா கடத்தலில் ஈடுபட்ட அன்பு மீது வழக்கு பதிவு செய்து திருத்தணி போலீசார் கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu