திருத்தணி அருகே பேரறிஞர் அண்ணா 116 பிறந்த விழா

திருத்தணி அருகே பேரறிஞர் அண்ணா 116 பிறந்த விழா
X

ஆர்கே பேட்டை  ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலார் சண்முகம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அம்மையார் குப்பத்தில் ஆர்கேபேட்டை ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை விழா கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 116-பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது.

விழாவில் அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திரு உருவ சிலைக்கு திமுக அவை தலைவர் ஏ.கே. மணி தலைமையில், ஆர்.கே.பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் சி. என்.சண்முகம் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தி தொடர்ந்து பொதுமக்களுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் முன்னதாக முன்னாள் கிளை செயலாளர் எஸ்.எஸ்.சுந்தரம் கொடியேற்றி வைத்தார். ஒன்றிய துணை செயலாளர் பி.கே.சீனிவாசன்,மாவட்ட நெசவாளரனி துணை அமைப்பாளர்‌ சி.பி.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் எஸ்.எஸ்.குமார்,பி.ஏகவள்ளிபழனி, ஏ.வி.மோகநாதன், எம்.ஜி.வேலாயுதம், என்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.பி.கிருபானந்தம், கிச்சு குமார், ஏ.கே.விஸ்வநாதன், எம்.எம்.சதாசிவம், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!