திருத்தணி அருகே நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து

திருத்தணி அருகே நின்றிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து
X

பைல்  படம்.

திருத்தணி அருகே கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 30.க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் தனியார் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் அரக்கோணம் திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில், வழக்கம்போல் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிச்செல்ல சென்று மாணவர்களை ஏற்றுக் கொண்டு கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மற்ற மாணவியை ஏற்றுக்கொள்ள பேருந்து சாலை ஓரத்தில் நின்ற போது அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த தனியார் பேருந்து கல்லூரி பேருந்து பின்புறம் பலமாக மோதியது. இதில் கிளீனர் மற்றும் 8 மாணவிகள் காயமடைந்தனர்

அதேபோல் தனியார் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் பயணிகள் உட்பட பல காயமடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அஷரத் பேகம், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் திருத்தணி வட்டாட்சியர் வெண்ணிலா வருவாய் ஆய்வாளர் கமல், ஆகியோர் நேரில் வந்து மாணவர்களுக்கு ஆறுதல் கூறி இந்த விபத்துக்கு காரணமான தனியார் பேருந்து மீது வழக்கு பதிவு செய்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா