பேருந்து கவிழ்ந்து விபத்து - 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்

பேருந்து கவிழ்ந்து விபத்து - 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்
X

திருத்தணி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் ரெடிமேட் உற்பத்தி தனியார் நிறுவனத்தில் திருத்தணி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது.சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது லேசாக மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது எதிரில் வேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதுவதை தடுக்க பேருந்து ஓட்டுநர் சாலைக்கு ஓரமாக பேருந்தை திருப்பிய போது திடீரென்று பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் குப்புற கவிழ்ந்தது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!