/* */

திருவள்ளூர் அருகே மர்ம கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர் பலி

திருவள்ளூர் அருகே மர்ம கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர்  அருகே மர்ம கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர் பலி
X

மர்ம குப்பல் தாக்குதலில் இறந்த வாலிபர்.

.திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.‌ இதில் ஊழியர்களை பணி அமர்த்துவதில் ஆறு ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் கூடுதலாக ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் ஆட்களை நியமிக்க ஏதுவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கீழச்சேரி அருகிலுள்ள பகுதி ஒப்பந்ததாரர்கள் யாரும் ஆட்களை பணியமர்த்த விடாமல் தடுக்கும்‌ விதமாக ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களை மர்ம கும்பல் பலமாக தாக்கியுள்ளது.
மப்பேடு அடுத்த கொண்டஞ்சேரியில் தங்கியிருந்த பத்ருல் இஸ்லாம் அப்துல் ராவ் மற்றும் அப்துல் அசிம் ஆகியோரை மர்ம கும்பல் பலமாக தாக்கியுள்ளது.
காயமடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அப்துல் அசிம் வயது 21 வயது மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அப்துல் அசிம் உயிரிழந்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் மப்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Updated On: 16 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  2. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  3. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  7. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  8. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  9. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  10. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை